திண்டுக்கல் மாவட்டத்தில் காதல் கணவரின் வீட்டின் முன்பு விஷம் குடித்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் வசித்து வரும் 28 வயதுடைய ரம்யா என்பவர், சென்னையில் இருக்கு என்ற தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் வேலை செய்து வந்தார். அங்கு அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் காதல் பற்றி இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. அதனை அறிந்த அசோக்கின் பெற்றோர் அவருக்கு உடனடியாக வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தனர்.
ஆனால் அசோக் அதை ஏற்க மறுப்பு தெரிவித்தார். அதனால் காதல் ஜோடிகள் இருவரும் திருமணம் செய்து கொண்ட சென்னையில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அசோக்கின் உறவினர்கள் கடந்த மாதம் சென்னைக்கு வந்து, தந்தையின் உடல் நிலை மோசமாக இருக்கிறது எனக் கூறி அசோக்கை அழைத்துச் சென்றனர். அதன் பிறகு நீண்ட நாள் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதனால் ரம்யா, கணவரின் வீட்டுக்குச் சென்று விசாரித்தார். அப்போது அவரின் பெற்றோர்கள் ரம்யாவை மிரட்டினர். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கடந்த மாதம் 14ஆம் தேதி மாவட்ட போலீஸ் அதிகாரியிடம் காதல் கணவரை சேர்த்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அசோக்கின் வீட்டுக்கு நேற்று சென்ற ரம்யா, தன் கணவரை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அசோக் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் அவரை கடுமையாக திட்டினார். அதனால் மனமுடைந்த ரம்யா, தன் காதல் கணவர் வீட்டின் முன்பு விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுபற்றி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.