Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அம்மிக்கல்லை போட்டு தாய் கொலை…. மகனின் அடுத்த முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் இசக்கியம்மாள். 48 வயதான இவர் பீடி சுற்றும் தொழிலாளி ஆவார். இவருக்கு மாரிச்செல்வம் மற்றும் மணிரத்னம் என்ற இருமகன்கள் மகன்கள் உள்ளனர். இசக்கியம்மாளின் மூத்த மகன் செல்வம் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகனான மணிரத்தினம் உள்ளூரில் கூலி வேலை பார்த்து வந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு விபத்தில் சிக்கிய மணிரத்தினம் மனநலம் பாதிக்கப்பட்டார்.

அதன் பிறகு அவர் ஆபத்து நிறைந்த செயல்களை செய்துவந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இசக்கியம்மாளை அவரது இளைய மகன் மணிரத்தனம் அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்தார். பின்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

இதனையடுத்து மணிரத்தினம் அலறல் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மணிரத்னத்தை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |