Categories
சேலம் மாநில செய்திகள்

அம்மியில் அரைத்த மசாலா .. கை மனம் மாறாத கிராமத்து சமையல்… சேலத்தில் அசத்தும் பெண்கள் உணவகம்!

சேலம் அருகே உணவகம் ஒன்றில் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படுவது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மறந்துபோன பாரம்பரிய உணவுகள் தற்போதைய தலைமுறைக்கும், நாகரத்துவாசிகளும் ஆசிரியத்தை தந்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் கூரை நெய்யப்பட்ட உணவகம் தான் “அழகப்பன் கிராமத்து உணவகம்”.

முழுக்க முழுக்க கிராமத்து பெண்களால் நடத்தப்படும் இந்த உணவகத்தை நெருங்கும் போதே குழம்பு வாசனை மூக்கை துளைக்கிறது. கிரமத்து உணவு தயாரிக்கும் நுட்பங்களை இந்தக்கால பெண்கள் மறந்துவிட்ட நிலையில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை முன்னோர்களின் நுட்பங்களை சிறிதும் மாறாமல் தருகின்றனர். கேள்வரகு கலியுருண்டை வாடிக்கையாளர்களின் கண்முன்னே தயாரிக்கப்பட்டு சுடசுட வாழையிலையில் பரிமாறப்படுவது நாவை சுண்டியிலிக்குறது.

ரூ.25 க்கு கேள்வரகு உருண்டைகளி சுவைமிக்க நாட்டுக்கோழி குழம்பு, மட்டன் குழப்பு, குடல் குழம்பு, கருவட்டுக் குழம்பு கிடைப்பது அசைவப்பிரியர்களை சுண்டியிழுக்கிறது. முட்டைபணியாரம், சாமிசோறு, கீரைகொழம்பு போன்ற சைவக்குழம்பு வகைகளும் பிரமாதம் என்கிறார்கள் உணவுப்பிரியர்கள். பக்குவமாக தயார் செய்யப்படம் மசாலாவில் மனம் உணவுப்பிரியர்களை சுண்டி இழுக்கிறது.

ஆரோக்கியத்தை நாடும் மக்கள் நம்ம கிராமத்து உணவகத்தை நாடுகின்றனர். உணவகத்தில் உணவு பட்டியல் ஏராளமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடி வருகின்றனர். கைமணம் மாறாத கிராமத்து உணவுவகைகளை செய்துவரும் சேலத்து பெண்களை பலரும் சமூகவலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்

Categories

Tech |