Categories
தேசிய செய்திகள்

“அயன்” பட பாணியில் தங்கம் கடத்த முயற்சி”…. வசமா சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…..!!!!!

அபுதாபியிலிருந்து டெல்லிக்கு வரக்கூடிய விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல்கிடைத்தது. அந்த தகவலின்படி டெல்லி விமான நிலையத்தில் அபுதாபியிலிருந்து வரும் பயணிகளிடம் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால் அவர்களிடம் எந்த ஒரு கடத்தல் தங்கமும் இல்லை. இதன் காரணமாக குழப்பமடைந்த சுங்கத்துறையினர், பயணிகளின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் ஒரு பயணியின் செயல்பாடுகள் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதன்பின் அவரை தனியே அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  அந்த விசாரணையில் அவருடைய தலையில் விக் அணிந்து இருப்பதும், அவற்றிற்குள் தங்கத்தை மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் ஆசன வாயிலும் தங்கத்தை மறைத்துக்கொண்டு வந்து இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து அந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். 630.45 கிராம் எடைக்கொண்ட அத்தங்கத்தின் மதிப்பானது ரூபாய் 30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தங்கம் கடத்திவந்த நபரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |