Categories
அரசியல் மாநில செய்திகள்

அயராது உழைக்க வேண்டும்… தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்…!!!

தமிழகத்தில் மக்களின் குறைகளை தீர்க்க திமுக தொண்டர்கள் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சொன்னதை செய்வோம்! செய்வதைச் சொல்வோம்! என அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆட்சியில் இல்லாதபோதும் மக்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும் கட்சி திமுக தான். திமுக ஆட்சி அமைந்ததும் மக்களின் கோரிக்கைகள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சிக்கு வந்து நூறு நாட்களில் குறைகளை தீர்க்க வேண்டும் என்றால் அதற்கு முந்தைய 100 நாட்களும் அயராது உழைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |