அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜோசுவா லிட்டில் 4.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார்..
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளுமே மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து, 85 வீரர்களை விடுவித்தது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் 2:30 மணிக்கு தொடங்கி கிட்டத்தட்ட 6 மணி நேரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த மினி ஏலத்தில் 10 அணிகளும் ரூ 167 கோடி செலவு செய்து 29 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 80 இந்திய வீரர்களை எடுத்துள்ளது. இதில் சாம் கரன், கேமரூன் கிரீன், பென் ஸ்டோக்ஸ், நிக்கோலஸ் பூரான், ஹாரி புரூக் ஆகிய 5 வீரர்கள் அதிக தொகை ஏலம் போனார்கள். அதேசமயம் யாரும் எதிர்பார்க்காத அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜோசுவா லிட்டில் 4.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார்..
அயர்லாந்தைச் சேர்ந்த ஜோசுவா லிட்டில் அடிப்படை விலையாக 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விடப்பட்ட நிலையில், இவரை வாங்க சில அணிகள் போட்டி போட்டது. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் 4.4 கோடி ரூபாய்க்கு ஜோசுவா லிட்டிலை ஏலத்தில் எடுத்தது. 2022 டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார் லிட்டில். மேலும் ஐபிஎல் 2022ல் சிஎஸ்கேயின் நெட் பவுலராக ஜோசுவா லிட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Joshua Little is SOLD to Gujarat Titans for INR 4.4 Crore #TATAIPLAuction | @TataCompanies
— IndianPremierLeague (@IPL) December 23, 2022