அயோத்தியில் கட்டப்படும் மசூதியின் இறுதியான வடிவமைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை என பேராசிரியர் எஸ்.எம்.அக்தார் கூறியுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், மாற்று இடத்தில் மசூதி கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து சென்ற மாதம் தொடக்கத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று, தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி கட்டப்படுகிறது.
அதன் கட்டடக்கலை வடிவமைப்பாளரும், டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக பேராசிரியர் எஸ்.எம். அக்தார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ” அயோத்தி மசூதியின் சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான அனைத்து வசதிகளும் கட்டப்படுகின்றன. 5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படுகின்ற மசூதி பற்றி தற்போது வரை இறுதியான வடிவமைப்பை உருவாக்கப்படவில்லை. இதுபற்றி தற்போது ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.