Categories
தேசிய செய்திகள்

அயோத்தியில் கண்கொள்ளா காட்சி… முறியடிக்கப்பட்ட கின்னஸ் சாதனை… ஒன்று திரண்ட மக்கள்…!!!

அயோத்தியில் நடந்த தீப உற்சவ நிகழ்ச்சி இதற்கு முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் ராமாயணத்தின் படி ராமபிரான் வனவாசம் சென்று விட்டு நாடு திரும்பிய நிகழ்வைக் கொண்டாடும் வகையில் தீப உற்சவம் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தீப உற்சவம் எப்போதும் உள்ள ஆரவாரத்துடன் நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்தது. இருந்தாலும் எவ்வித தடங்களும் இல்லாமல் தீப உற்சவம் நேற்று முன்தினம் அயோத்தியில் மிகக் கோலாகலமாக நடந்தது. சரயு நதிக்கரையில் மக்கள் ஒன்று கூடி லட்சக்கணக்கான தீபங்களை ஏற்றி ராமபிரானை வழிபட்டார்கள். அங்கு மொத்தம் 6,06,569 விளக்குகள் ஏற்றப்பட்டன.

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வருடம் அதிக எண்ணிக்கையிலான விளக்குகள் ஏற்றப்பட்டு உள்ளன. இதற்கு முன்னதாக அடைக்கப்பட்டிருந்த கின்னஸ் சாதனையை முறியடித்து இது புதிய சாதனையை படைத்துள்ளது. அயோத்தி நகரம் முழுவதையும் பரவசத்தில் ஆழ்த்தி உள்ள இந்த தீப உற்சவ நிகழ்ச்சி மிகப்பெரும் வெற்றி என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பெருமையுடன் கூறியுள்ளார். அடுத்த வருடம் இந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |