இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடி வெடித்து மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில் தீப உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி அயோத்திய நகரின் சரயூ நதியின் கரையோரத்தில் 9 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி கொண்டாடப்பட்டது.
இதானல் அயோத்தி முழுவதும் தீப ஒளியால் ஜொலி ஜொலித்தது. இதில் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். மேலும் சிறப்பு விருந்தினராக சுற்றுலாத் துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி, மாநில கவர்னர் ஆனந்திபென் படேல் மற்றும் மாநில அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இதையடுத்து கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 6 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைத்தது. ஆனால் இந்த ஆண்டு 9 லட்சம் தீபங்கள் ஏற்றி புதிய கின்னஸ் படைத்துள்ளது.