Categories
தேசிய செய்திகள்

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில்… என்ன பிளான் தெரியுமா?… கேட்டா அசந்து போயிருவீங்க…!!!

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் வடிவமைப்பு பற்றி சில தகவல் வெளியாகியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான முழு பொறுப்பையும் ராமஜென்ம தீர்த்த ஷேத்ரா அமைப்பு ஏற்றுக் கொண்டு பணியாற்றி வருகிறது. இந்தக் கோவில் கட்டுவதற்கு நாடு முழுவதும் மக்களிடம் நிதி திரட்டி வருகின்றது. மதுரையில் நிதி வழங்குவதற்கான நிகழ்ச்சி விஎச்பி மாநில அமைப்பாளர் சேதுராமன் தலைமையில் நடந்தது. சின்மயா மிஷன் மற்றும் கிறிஸ்துவ இஸ்லாமிய சமூகத்தினரும் நிதி உதவி வழங்கி உள்ளனர்.

அப்போது உரையாற்றிய மாநில அமைப்பாளர், “அரசியலுக்கு அப்பாற்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பலரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். நாடு முழுவதும் உள்ள 5.25 லட்சம் கிராமங்களுக்கு செல்ல உள்ளோம். மொத்தம் 13 கோடி பேரிடம் நிதி திரட்டுவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் கிராமங்களில் 50 லட்சம் பேரை சந்திக்க உள்ளோம். அயோத்தியில் இரும்பு, சிமெண்ட் பயன்பாடு இல்லாமல் பழமையான பாரம்பரிய முறை மற்றும் தற்போதைய நவீன தொழில்நுட்பத்துடன் ராமர் கோயில் கட்டப்படும்.

ஆன்மீகத்தையும் தெய்வீகத்தையும் பறைசாற்றும் அன்பின் அடையாளமாக இந்த கோவில் விளங்கும். மக்களிடம் வெளிப்படையாக நிதி திரட்டும் நோக்கத்தில் கூப்பன் காசோலை ஆன்லைன் என பல வழிகளில் இது திரட்டப்பட்டு வருகிறது. இந்த நிதி திரட்டும் பணி இந்த மாதம் 27ஆம் தேதி முடிவடையும். அயோத்தியில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கோயில் கர்ப்பகிரகத்தில் ராமர் அருள்பாலிக்கிறார். கோவில் கட்டுமான பணிகள் எப்போது நிறைவடையும் என்று தற்போது கூற இயலாது. இதில் எவ்வித அரசியலும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |