Categories
தேசிய செய்திகள்

அயோத்தியில் ராமர் கோயில் 2024-ல் கட்டி முடிக்கப்படும்… கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!!

அயோத்தியில் ராமர் கோயில் 2024 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் சதாசிவம் கோஷ்டி செய்தியாளருக்கு பேட்டி அளித்தபோது , உச்சநீதிமன்ற தீர்ப்பால் யாரும் வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வரும் நான்காம் ஆண்டு முடிவடையும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளார். மேலும் ராமர் கோவிலை கட்டி முடிப்பது முக்கிய பணி என்றும் அதுவரை காசி, மதுரா போன்ற பிரச்சினைகளில் தலையிட விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |