Categories
தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் நிலம் வாங்கியதில்…. ஊழல் முறைகேடு…..!!!!

அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாக அறக்கட்டளை மீது எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து உள்ளன. ராமர் கோவிலுக்காக பேக் பைசி கிராமத்தில் 1.208 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு உள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை ரூ.18.5 கோடிக்கு அறக்கட்டளை வாங்கியிருப்பதாகவும், இதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் சமாஜ்வாடியை சேர்ந்த மாநில முன்னாள் மந்திரி பவன்சிங் ஆகியோர் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இந்த நிலையில், அயோத்தி நில முறைகேடு குற்றச்சாட்டு விவகாரம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் பக்தியால் கடவுளின் காலடியில் தங்கள் காணிக்கைகளை செலுத்தியுள்ளனர். ஆனால் அந்த நன்கொடையை தவறாக பயன்படுத்துவது அநீதியானது. இது ஒரு பாவம் மற்றும் பக்தர்களின் நம்பிக்கையை அவமதிக்கும் செயலாகும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Categories

Tech |