Categories
தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவில்… “2024 ஜனவரி மாதம் பக்தர்கள் தரிசனத்திற்கு திறப்பு”… ராமஜென்ம பூமி அறக்கட்டளை அறிவிப்பு…!!!!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். இந்த சூழலில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார் அப்போது அவர் பேசியதாவது, ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50% முடிவடைந்துள்ளது கட்டுமான பணிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றம் திருப்தி அளிக்கிறது. அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் கோவிலின் தரைத்தளம் தயாராகிவிடும் 2024 ஆம் வருடம் ஜனவரி 14ஆம் தேதி மகர சங்கராந்தி நாளில் கோவிலில் கர்ப்ப கிரகத்தில் ராமர் சிலைகள் நிறுவப்படுகிறது.

அதனை தொடர்ந்து அதே மாதம் ராமர் கோவில் பக்தர்களுக்கு திறந்துவிடப்படும் கோவில் கட்டி முடிப்பதற்கு மொத்தம் 1,800 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. கோவிலில் பிரபலமான இந்துமடாதிபதிகள் சிலைகள் வைப்பதற்கு இடம் ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று பத்திரிகையாளர்கள் பலர் ராமர் கோவில் கட்டுமான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு பிரதமர் மோடி கடந்த 23ஆம் தேதி பார்வை பார்வையிட அமைக்கப்பட்ட உயரமான இடத்திலிருந்து அவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

அதன்பின் கோவிலின் 70 ஏக்கர் நிலத்திற்குள் வால்மிகி, கேவத் சபரி, ஜடாயு, சீதை, விநாயகர், லட்சுமணன் போன்றோருக்கும் கோவில்கள் கட்ட திட்டமிடப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் மக்ராணா மலையில் வெட்டி எடுக்கப்படும் மார்பில் கற்கள் கோவில் கருவறைக்குள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 2024 ஆம் வருடம் ஏப்ரல், மே மாத காலகட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில் அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக ராமர் கோயில் பக்தர்களுக்கு திறக்கப்படுவது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

Categories

Tech |