அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தில் நடிகை நித்யா மேனன் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் கடந்த 2020-ஆம் ஆண்டு சச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். முன்னாள் ராணுவ வீரருக்கும், காவலருக்கும் இடையேயான ஈகோவை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. திரிவிக்ரம் இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா இருவரும் நடிக்கின்றனர். சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
We are extremely delighted to welcome an exceptional & proficient talent @menennithya on board for our #ProductionNo12 ⭐#BheemlaNayak Power Star @PawanKalyan @RanaDaggubati #Trivikram @MusicThaman @saagar_chandrak @dop007 @vamsi84 @NavinNooli pic.twitter.com/xxfRx8znFZ
— Sithara Entertainments (@SitharaEnts) July 30, 2021
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை நித்யா மேனன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் அவர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படம் வருகிற 2022-ஆம் ஆண்டு சங்கராந்தி அன்று ரிலீசாக இருக்கிறது.