அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது .
மலையாள திரையுலகில் கடந்த 2020-ஆம் ஆண்டு சச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். முன்னாள் ராணுவ வீரருக்கும், காவலருக்கும் இடையேயான ஈகோவை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. திரிவிக்ரம் இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா இருவரும் நடிக்கின்றனர்.
https://twitter.com/SitharaEnts/status/1422211451830243339
இந்த படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் வருகிற ஜனவரி 12-ஆம் தேதி தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸாக இருக்கிறது.