அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது.
மலையாள திரையுலகில் கடந்த 2020-ஆம் ஆண்டு சச்சி இயக்கத்தில் பிரித்திவிராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். தற்போது இந்த படத்தின் தெலுங்கு உரிமையை நாகவம்சி கைப்பற்றியுள்ளார். சாகர்.கே.சந்திரா இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.மேலும் நித்யா மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
Here's the First Glimpse of the POWER Storm ⚡#BHEEMLANAYAK is here 🔥
Coming to rule your playlists from Sept 2nd 🎶🥁#BheemlaNayak @pawankalyan @RanaDaggubati #Trivikram @MenenNithya @MusicThaman @saagar_chandrak @dop007 @NavinNooli @vamsi84
— Sithara Entertainments (@SitharaEnts) August 15, 2021
இந்நிலையில் அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‘பீம்லா நாயக்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் பவன் கல்யாணின் அதிரடியான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.