அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் கடந்த 2020-ஆம் ஆண்டு சச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். முன்னாள் ராணுவ வீரருக்கும், காவலருக்கும் இடையேயான ஈகோவை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. திரிவிக்ரம் இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா இருவரும் நடிக்கின்றனர்.
Power Star as #BheemlaNayak, will take charge Sankranthi 2022 🔥
Here's a small glimpse from the sets of #ProductionNo12 💫
Power Star @PawanKalyan @RanaDaggubati #Trivikram @MusicThaman @saagar_chandrak @dop007 @vamsi84 @NavinNooli
— Sithara Entertainments (@SitharaEnts) July 27, 2021
சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 2022-ஆம் ஆண்டு சங்கராந்தி அன்று இந்த படம் வெளியாகவுள்ளது.