உத்திரப்பிரதேசத்தில் பாஜக கட்சி சட்டசபை தேர்தலுக்கான அதிரடியான சில முடிவுகளை எடுக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் முதலில் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட யோகி ஆதித்யநாத் தற்போது தேர்தலில் போட்டியிடுவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் அத்தனை பேருடைய போகஸ் லைட்டும் பிரியங்கா மற்றும் அகிலேஷ் யாதவ் பக்கம் திரும்பியுள்ளது.
ஏற்கனவே மாயாவதி உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெளிவாக கூறிவிட்டார். இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் தேர்தலில் போட்டியிடுவார்களா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ ஏற்கனவே கடந்த தேர்தலில் ராகுல் காந்தி அமேதி லோக்சபா தொகுதியில் தோல்வியை சந்தித்ததால் தற்போது தேர்தல் களத்தில் பிரியங்காவை இறக்க பலத்த யோசனையில் உள்ளது.