அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்த எஸ்.பி வேலுமணியிடம் வருமானம் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடியான கேள்விகளை கேட்டு துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் ஈபிஎஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.