Categories
உலக செய்திகள்

அய்யயோ!…. கீழே விழுந்து செத்து மடிந்த பறவைகள்…. என்ன ஆச்சி?…. நீங்களே பாருங்க….!!

மெக்சிகோவில் வானில் சுற்றி கொண்டிருந்த பறவைகள் திடீரென செத்து மடிந்தன. 

குளிர்காலத்திற்காக வடக்கு கனடாவில் இருந்து மஞ்சள் தலை கொண்ட இந்த பறவைகள் இடம்பெயர வருவது வழக்கம். அந்த வகையில் மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள சிவவ்வா நகரில் அல்வரோ ஆப்ரேகான்  என்ற இடத்தில் வானில் கூட்டமாக பறவைகள் வட்டமிட்டு பறந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் திடீரென இந்த பறவைகள் சாலைகளில் விழுந்து செத்து மடிந்தன. இதற்கான காரணம் பற்றி உள்ளூர் கால்நடை மருத்துவர் தெரிவிக்கையில் “இந்த பறவைகள் தொழிற்சாலையில் இருந்து வரும் நச்சு வாயுவை சுவாசித்தோ அல்லது கரண்ட் கம்பிகளில் உரசி இருந்தாலோ இவைகள் இறந்திருக்கலாம்” என கூறினார்.

Categories

Tech |