Categories
தேசிய செய்திகள்

அய்யயோ…! சோபாவிற்குள் மனைவி உடல்…. நண்பனின் கொடூரச்செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!!

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் சுப்ரியா ஹண்டே.  இவர் கடந்த 15-ம் தேதி தனது வீட்டில் சோபாவில் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில் இருந்துள்ளார். சுப்பையா ஷிண்டே வீட்டில்  கொலையாளி விட்டுச்சென்ற காலனி இருந்ததை கண்டனர். இதுபற்றி சுப்பிரியாவின் கணவரிடம்  விசாரணை நடத்தியதில், அவரின்  நண்பனான நபி மும்பையைச் சேர்ந்த ஒருவர் விஷால் தாகர் (வயது 28) என்பவரின் காலணி தான் என தெரியவந்துள்ளது.

இவரும் சுப்ரியாவின் கணவரும் ஒரே மாதிரி காலணிகளை வாங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து விஷாலை பிடித்து விசாரித்ததில் சுப்பிரியவை கொலை செய்தது குறித்து அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது சம்பவத்தன்று சுப்பிரியாவின்  கணவர் வேலைக்காக வெளியே சென்றிருந்தார். அவரது மகன் பள்ளிக்கூடம் சென்றுள்ளார்.  வீட்டில் தனிமையாக சுப்ரியா  இருந்துள்ளார்.

அப்போது சுப்பிரியவை  நேரில் சந்திக்க விஷால் வந்துள்ளார். அங்கு அவருடன் உல்லாசமாக இருக்க வருமாறு விஷால் கூறியுள்ளார். இதனை கேட்ட சுப்ரியா,விஷாலை வீட்டை விட்டு உடனே வெளியே செல்லுமாறு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஷால் அவரது வீட்டிலிருந்து நைலான் கயிற்றின் மூலம் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார்.  இதில் சுப்ரியா  மூச்சுத்திணறி உயிரிழந்தார். மேலும் அவரது உடலை மறைப்பதற்காக சோபாவிற்குள் மறைத்து வைத்து சென்றுள்ளார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |