வரும் மார்ச் 4ஆம் தேதி நிலவில் ராக்கெட் மோத உள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாசா நிறுவனம் சில நாட்களுக்கு முன் வரும் மார்ச் 4ஆம் தேதி நிலவில் ராக்கெட் மோத உள்ளதாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த ராக்கெட் கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸல் அனுப்பப்பட்ட ராக்கெட் என்றும் இந்த ராக்கெட் விண்வெளியில் கடந்த 7 ஆண்டுகளாக குழப்பமான பாதையில் ஆபத்தான முறையில் சுற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நிலாவில் மோதும் ராக்கெட் ஸ்பேஸ் எக்ஸ்-ன் ராக்கெட் இல்லை.
இது 2014லில் சீன விண்வெளி ஆய்வு மையத்தால் சந்திரனை ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்ட சாங்கி 5-டி1- விண்கலத்திற்கான பூஸ்டர் என்று விண்வெளி ஆய்வாளர்கள் நினைக்கின்றனர். ஆனால் இந்த விஷயத்தை சீனா மறுக்கிறது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் பத்திரிகையாளர் வாங் வென்பின் கூறுகையில். “இந்த ராக்கெட் 5-டி1- விண்கலத்திற்கான பூஸ்டர் என்று ஆய்வாளர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் பூஸ்டர் ராக்கெட் பூமியின் வளிமண்டலத்தில் முன்னதாகவே பாதுகாப்பாக நுழைந்து முழுமையாக எரிந்து விட்டது. மேலும் சீனா தனது விண்வெளி நடவடிக்கைகளை நீண்டகாலமாக மனசாட்சியுடன் செய்து வருகிறது. இதனால் நிலாவில் மோதும் ராக்கெட் எங்களுடையது கிடையாது” என்று அவர் கூறியுள்ளார். இந்த ராக்கெட் யாருடையதாக இருந்தாலும் மார்ச் 4ஆம் தேதி நிலவின் பின்பகுதியில் மோதுவது உறுதியாகியுள்ளது. இதனால் பூமிக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.