தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூடிய இடத்தில் பையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பய் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்க செய்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.