நியூயார்கில் வாழும் மான்களுக்கு ஓமைக்ரான் தொற்று உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்க நாட்டின் அயோவா மாநிலத்தில் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை அங்கு வாழும் 131 மான்களின் திட்ட மாதிரியை சேகரித்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் 19 மான்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்ட 68 மான்களில் மூக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டதில் 7 மான்களின் மூக்கில் கொரோனா வைரஸ் உயிருடன் இருப்பதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்திய போது 80 சதவீத வெள்ளை நிற மான்களுக்கு ஓமைக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மான்கள் நியூயார்க் நாட்டில் உள்ள தீவில் சுதந்திரமாக வாழ்ந்து வரும் அவைகளுக்கு முதல் முறையாக ஓமைக்கரான் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூயார்க்கில் மனிதர்களின் மாதிரியில் கண்டறியப்பட்ட ஓமைக்காரன் போன்ற அம்சங்கள் இந்த வெள்ளை நிற மான்களுக்கும் இருப்பதால் மனிதர்களிடம் இருந்து தான் அவற்றுக்கு பரவியிருக்கலாம் என்று தெரிகிறது. இதனை தொடர்ந்து மான்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டால் மனிதர்கள் போலவே அவைகளுக்கும் மீண்டும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிகிறது.
இந்த ஆய்வில் ஈடுபட்ட உரிய மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவப் பேராசிரியர் சுரேஷ் குச்சிப்புடி கூறுகையில். “மான்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா தொற்று பரவுவது தொடர்பாக ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கொரோனா உருமாற்றம் அடைந்து புதிய கொரோனா உருவாக்கும். அதை தடுப்புசிகளால் கட்டுப்படுத்த முடியாது. மனிதர்களிடம் இருந்து மான்களுக்கு கொரோனா பரவுவதையும், அவைகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதையும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.