நாடு முழுதும் கொரோனா பரவல் கடந்த வருடம் கோரதாண்டவமாடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்த சமயத்தில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்துள்ளது.
இதனால் ஒரு சில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் ஊரடங்கிற்கோ, இரவு நேர ஊரடங்கிற்கோ வாய்ப்பில்லை என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். மீண்டும் ஊரடங்கு என்ற நிலை வராமல் தடுக்க மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிமனித இடைவெளி, அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.