Categories
மாநில செய்திகள்

அய்யய்யோ… அடுத்த ஆபத்து… 24 மணி நேரத்திற்குள்…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி தமிழகத்தை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதனால் பெரும்பாலான இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதிலும் சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன்பிறகு புயலாக உருவாகி டிசம்பர் இரண்டாம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை நெருங்கும். அதனால் கடற்கரையோரப் பகுதி மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |