Categories
தேசிய செய்திகள்

அய்யய்யோ இந்த மாத்திரைகளை சாப்பிடாதீங்க… உயிருக்கே ஆபத்து… கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் 16 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதிலும் ஜீரணக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் 16 மருந்துகள் தரமற்ற என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த மாதத்தில் 1,001 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 985 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஜீரண பாதிப்பு, பாக்டீரியா, தொற்று பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் 16 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

மேலும் தரமற்ற மருந்துகளின் விவரங்களை cdsco.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும். அதனை பார்த்து மக்கள் இனிமேல் இந்த மாத்திரைகளை சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி அந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் உடலில் பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயமும் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே மக்கள் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

Categories

Tech |