Categories
தேசிய செய்திகள்

அய்யய்யோ… ஒரு மாசமா காருக்குள்ள தான் இருந்துச்சா…? சிக்கிய ஆபத்தான விஐபி… பெரும் அதிர்ச்சி….!!!!!!

யாருக்கும் தெரியாமல் ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஆடம்பர காரில் இருந்த ராஜ நாகத்தை வனத்துறையினர் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த சுஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை விஷயமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக காரில் மலப்புரம் வழிக்கடவு சென்றுள்ளார். அப்போது தான் ஓடி வந்த காரை அடர்ந்து காட்டுப் பகுதியில் சாலை ஓரம் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அதன் பின் பணிகளை முடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது அந்த காரினுள் ராஜநாகம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த பாம்பை பிடிக்க சுஜித் வனத்துறையினரின் உதவி நாடி உள்ளார். இந்த நிலையில் வனத்துறையினர் தேடும்போது அந்த பாம்பு தென்படவில்லை. இதனை அடுத்து காருக்குள் இருந்து பாம்பு காட்டுக்குள் தப்பி சென்று இருக்கலாம் என கூறி வனத்துறையினர் காரை ஓட்டி செல்லுமாறு கூறியுள்ளனர்.

அதன்பின் சந்தேகத்தின் பேரில் அந்த காரை சர்வீஸ் சென்டரில் கொடுத்து முற்றிலுமாக சர்வீஸ் செய்துள்ளார். அப்போதும் பாம்பு தென்படவில்லை. இதனை தொடர்ந்து ராஜநாகம் போய்விட்டது என கருதியை சுஜித் கடந்த ஒரு மாதத்தில் தனியாகவும் மனைவி குழந்தைகளுடனும் அந்த காரில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வரை பயணம் சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் காருக்குள் பாம்பு சட்டை கழட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷை அழைத்து காரை முற்றிலுமாக பரிசோதனை செய்துள்ளார். அப்போதும் பாம்பு தென்படவில்லை இந்த சூழலில் சுஜித்தின் வீடு அருகே பாம்பு ஊர்ந்து செல்வதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பாம்பை பத்திரமாக பிடிக்க வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அடிப்படையில் வனத்துறையினர் 8 அடி நீளம் உள்ள அந்த ராஜ நாகத்தை பிடித்துள்ளனர். யாருக்கும் தெரியாமல் எந்தவித தீங்கும் விளைவிக்காமல் ஒரு மாதத்திற்கு மேலாக ஆடம்பர காரில் உல்லாச பயணம் செய்த அந்த ஆபத்தான ராஜ நாகத்தை மீண்டும் வழிகடவு பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் முடிவு செய்திருக்கின்றனர்.

Categories

Tech |