Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“அய்யய்யோ!” கத்தியால் குத்தியதோடு… காரை 3 முறை ஏற்றி மனைவி படுகொலை… கணவருக்கு நேர்ந்த சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மனைவியை கத்தியால் குத்தியதோடு அவர் மீது 3 முறை கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் கோகுல் குமார்(30) என்பவர் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தனா (26) என்ற பெண்ணை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கோகுல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கீர்த்தனாவும் தனியார் மருத்துவமனை ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஆனால் இவர்களின் வழக்கு நிலுவையில் இருந்ததால் கடந்த ஒருவருடமாக மதுராந்தகத்தில் இருக்கும் தன் பெற்றோர் வீட்டில் கீர்த்தனாவும் கோகுல் குமார் மேல்மருவத்தூருக்கு அருகிலுள்ள சோத்துப்பாக்கத்தில் தனி வீடு எடுத்தும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2 மணியளவில் கோகுல் குமார் மாமனார் வீட்டிற்கு சென்றபோது கீர்த்தனாவிற்கும் இவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மிகுந்த கோபம் அடைந்த கோகுல் தான் மறைத்து வைத்திருக்கும் கத்தியால் கீர்த்தனாவின் கழுத்திலும், மார்பிலும் கொடூரமாக தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த கீர்த்தனாவின் தந்தை ஹரியையும் கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து தப்பித்து ஓடிய கீர்த்தனாவை காரை எடுத்துச் சென்று விடாமல் அவர் மீது 3 முறை ஏற்றி இறக்கி கோகுல் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அதன்பின்பு காரில் அவர் தப்பித்து சென்றுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் கீர்த்தனாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பியுள்ளனர். மேலும் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் கீர்த்தனாவின் உடலில் 20க்கும் அதிகமான கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளது.

இதனையடுத்து கீர்த்தனாவை கொலை செய்துவிட்டு தப்பி சென்ற கோகுல் பதற்றத்தில் அச்சரப்பாக்கம் அருகில் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி இருக்கிறார். இதில் கோகுலுக்கு காயம் ஏற்பட்டதால் காவல்துறையினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பின்பு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |