Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”.. குழந்தைகள் காப்பகத்தில் இளைஞர் வெறிச்செயல்.. 3 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்ட கொடூரம்..!!

பிரேசிலில் குழந்தைகள் காப்பகத்தில் நுழைந்த இளைஞர், 2 குழந்தைகள் மற்றும் 3 பணியாளர்களை வெட்டிக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரேசிலின் Santa Catarina மாநிலத்தில் இருக்கும் Saudades என்ற நகரில், 2 முதல் 6 வயதுடைய குழந்தைகளை பராமரிக்கும் மையம் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த மையத்திற்குள்  திடீரென்று 18 வயது இளைஞர் ஒருவர், சாமுராய் வாளுடன் நுழைந்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து அங்கிருந்த குழந்தைகள் மற்றும் ஊழியர்களை சராமாரியாக வெட்டி விட்டு தன் வயிறு மற்றும் கழுத்தில் வெட்டி தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். இதை குழந்தைகள் மூவர் மற்றும் பணியாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற குழந்தைகளும், ஊழியர்களும் அலறியதைக்கேட்ட அருகில் வசிப்பவர்கள், காவல்துறையினர் மற்றும் அவசர உதவிகளை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தைகள் மற்றும் பணியாளர்கள் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும், உயிருக்கு போராடிய நிலையில் கிடப்பதையும் கண்டு அதிர்ந்துள்ளனர்.

அதன் பின்பு அவர்களை, உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிருக்கு போராடி வருவதாகவும், அவர் தாக்குதல் நடத்த காரணம் என்ன? என்று தற்போது வரை தெரியவில்லை என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |