தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் 37 ஆயிரம் மாணவர்கள்,பத்தாயிரம் மாணவியர் என 47 ஆயிரம் பேர் தோல்வியடைந்துள்ளனர். அதிகபட்சமாக கணிதத்தில் மாணவர்கள் 60 ஆயிரம் பேர், மாணவிகள் 23 ஆயிரம் பேர் என மொத்தம் 83 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறவில்லை. அதற்கு அடுத்தபடியாக சமூக அறிவியலில் 8.14 சதவீதம், அறிவியலில் 6.33 சதவீதம்,ஆங்கிலத்தில் 3.62 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என புள்ளி விபரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 47 ஆயிரம் பேர் தாய்மொழியாக தமிழில் தேர்ச்சி பெறாதது, ஆசிரியர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் கவலையடையச்செய்துள்ளது.
Categories