Categories
சினிமா

அய்யய்யோ….!! நம்ம சூர்யாவுக்கு வந்த சோதனையை பாருங்க….! ஷாக்கான சூர்யா வீட்டார்…!!!

நடிகர் சூர்யா பெயரில் வெளியான கடிதம் போலியானது என சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளதது.

நடிகர் சூர்யா நடிப்பு மட்டுமின்றி பொது சேவைகளிலும் அதீத கவனம் மற்றும் ஆர்வம் காட்டி வருவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. மேலும் அவர் அவ்வப்போது சமூக மற்றும் பொதுநலம் சார்ந்த கடிதங்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பெயரில் வெளியிடப்பட்ட ஒரு கடிதம் போலியானது என அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இது பலராலும் வரவேற்கப்பட்டது. “இதற்கான சட்ட போராட்டத்தை முன்னின்று நடத்திய திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் அவர்களுடைய நலனுக்கான இயக்கங்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். அவர்களோடு நானும் அகரம் அறக்கட்டளை சார்பாக இணைந்து கொள்கிறேன்.4000 மருத்துவக் கல்வி இடங்கள் இதன்மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு கிடைக்க இருக்கிறது. எனவே இந்த தீர்ப்பானது ஒரு வருடத்திற்கு 800க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்களின் மருத்துவ கல்வியை கனவை நனவாக்கும் என்பது என் நம்பிக்கை. சமூக நீதிப் பாதையில் தமிழ்நாடு வீறுநடை போடும் நாமும் உடன் இருப்போம்..!” எனக்கூறி இருந்தது இந்த கடிதம் சூர்யா சார்பில் அனுப்பப்படவில்லை என மறுக்கப்பட்டுள்ளது. இது சூர்யாவின் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |