Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”.. பயணிகளுடன் சென்ற ரயில்.. திடீரென தடம்புரண்டு விபத்து.. பெண் பலியான சோகம்..!!

தெற்கு பாகிஸ்தானில் தலைநகரான லாகூருக்கு பயணிகளுடன் சென்ற ரயில் இன்று அதிகாலையில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

கராச்சியிலிருந்து பயணிகளுடன் 18 பெட்டிகள் உடைய ரயில் ஒன்று லாகூருக்கு சென்றுள்ளது. அப்போது ரயிலில் இருந்த 8 பெட்டிகள் திடீரென தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ரயிலின் 6 பெட்டிகள் ஆழமில்லாத சிறு பள்ளத்திற்குள் விழுந்துள்ளது. இதில் 40 நபர்கள் பலத்த காயம் அடைந்ததாகவும் ஒரு பெண் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த ரயில் அதிகாலை 1:15 மணியளவில் தெற்கு சிந்து மாகாணத்தில் இருக்கும் Rohri மற்றும் Sangi போன்ற நிலையங்களுக்கு இடையில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இரண்டு திசைகளிலும் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்று ரயில்வே அதிகாரி Kamran Lashari என்பவர் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு படுகாயம் அடைந்த பயணிகள் 40 பேர் மற்றும் உயிரிழந்த பெண்ணின் சடலமும் அருகிலிருக்கும் நகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கும் காயமடைந்த பயணிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை அரசால் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரயில் திடீரென்று தடம் புரள காரணம் என்ன? என்பது குறித்த தகவல்கள் எதுவும்  வெளியாகவில்லை. எனினும் இதுபோன்ற ரயில் விபத்துக்கள் பாகிஸ்தானில் ஏற்படுவது வழக்கமானது. மேலும் தண்டவாளங்கள் அங்கு நன்றாக பராமரிக்கபடாததாலும், ஒழுங்கில்லாத சமிக்கை அமைப்புகளினாலும் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவது தொடர்ந்து வருகிறது.

Categories

Tech |