ஓசூரில் நிதி நிறுவனத்தில் 3000 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தின் துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான 3000 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தூட் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்து ஐந்து பேர், மேலாளர் உட்பட 4 பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.