Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”.. பிறந்தநாள் கொண்டாடியபோது கொல்லப்பட்ட குழந்தை.. மர்ம கும்பலுக்கு வலைவீச்சு..!!

அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 3 வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

அமெரிக்காவில் உள்ள புளோரிடா என்ற மாகாணத்தில் உள்ள மியாமி அவென்யூவில் இருக்கும் பகுதியில் எலிஜா லாபிரான்ஸ் என்ற 3 வயது குழந்தை தன் பிறந்தநாளை கடந்த 24 ஆம் தேதி  கொண்டாடியிருக்கிறார். அப்போது கேக் வெட்டி, முடித்தவுடன் சுமார் 8 மணிக்கு ஒரு மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து அந்த வீட்டை நோக்கி திடீரென்று துப்பாக்கியால் சூட்டுள்ளனர்.

இக்கொடூர சம்பவத்தில் பிறந்தநாள் கொண்டாடிய குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் ஒரு பெண்ணிற்கும் குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் நல்ல வேளையாக அவர் உயிர்பிழைத்து விட்டார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மியாமி டேட் காவல்துறையினர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு சுமார் 15,000 டாலர் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் சிறுவனின் குடும்பத்தினர் மேலும் 10,000 டாலர் வெகுமதி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையின் உறவினர் ஒருவர் கூறுகையில், இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் குழந்தையின் பிரிவை தாங்கமுடியாமல் அவரின் தாய் தவித்து வருகிறார். எனவே அந்த படுபாவிகளை விரைவாக கைது செய்ய உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |