Categories
மாநில செய்திகள்

அய்யய்யோ மக்களே…. மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது…. எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது இன்னும் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில்வங்கக்கடலில் நவம்பர் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தீவிரமடையும் என்று எச்சரித்துள்ளது.அதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |