மின்சாரம் பாய்சப்பட்ட கதவை திறந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பிடூர் மாவட்டம் சாய்ஹிடா என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபரும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மதுப்பழக்கம் கொண்ட அந்த நபர் மது குடித்துவிட்டு தனது மனைவியை அவ்வப்போது தாங்கி வந்துள்ளார். இதற்கு இடையே கணவன் மனைவி இடையே நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் தீவிரம் அடைந்ததை அடுத்து அந்த பெண் தனது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் கணவர் அவரது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் சண்டையிட்டு வீட்டை விட்டு வந்ததால் தனது மனைவி மீது மிகுந்த கோபத்தில் இருந்த அந்த நபர் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு அவரது மாமியார் வீட்டின் முன்பு இருந்த இரும்பு கதவு மீது மின்சாரத்தை பாய்ச்சியுள்ளார். மின்சார ஒயரை இரும்பு கதவில் உரசும்படி வைத்து கதவில் மின்சாரத்தை பாய்த்துள்ளார். ஆனால் மனைவியை கொலை செய்ய எண்ணி மின்சாரத்தை பாய்ச்சிய கதவை அவரது மாமியார் திறந்து உள்ளார்.
அப்போது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மாமியார் உயிரிழந்துள்ளார். இதை அருகே இருந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண்ணின் கணவர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இந்த நிலையில் இது பற்றி தகவல் அறிந்து போலீஸர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன்பின் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றார்கள்.