Categories
தேசிய செய்திகள்

அய்யய்யோ மரண ஓலம் கேட்கிறது… கண்ணீர் விட்டு கதறல்… விவசாயி மரணம்…!!!

டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய முயன்ற விவசாயின் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தினமான இன்று சுமார் 3 லட்சம் டிராக்டர்கள் உடன் டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகிறார்கள். டெல்லி சஞ்சய் காந்தி நகரில் நுழைந்த விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய முயன்றபோது போலீசார் தாக்கியதில் விவசாயி நவநீத் (45) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது உடல் மீது தேசியக்கொடி போர்த்தி விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறி அழும் புகைப்படம் வெளியாகியுள்ளது.மேலும் போராட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் வன்முறையை அரங்கேற்றி உள்ளனர் என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Categories

Tech |