நேற்று இந்தோனேசியா நாட்டில் உள்ள அமாஹாய் என்ற நகரில் திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் 19.8 கிலோ மீட்டர் ஆழத்தில் அளவிடப்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.5-ஆக பதிவாகியிருந்ததாகவும் புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த திடீர் நிலநடுக்கத்தால் அமாஹாய் நகரில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா ? என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.