பெரம்பலூர் மாவட்டம் திருவிளக்குறிச்சியில் இரண்டு மாடுகள் மின்னல் தாக்கி பரிதாபமாக செத்தன.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவிளக்குறிச்சி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 கறவை மாடுகளை வளர்த்து வந்தார். அந்த மாடுகளை பட்டியில் கட்டியிருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 12-ஆம் தேதி திடீரென மழை பெய்தது.
அப்போது இரண்டு மாடுகளும் மின்னல் தாக்கி பரிதாபமாக செத்தன. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் ரங்கநாதன் தகவலறிந்து அங்கு வந்து பார்வையிட்டார். மேலும் அங்கே இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது கிராம நிர்வாக அதிகாரி நாராயணசாமியும் அவருடன் இருந்தார்.