தனுஷின் “நானே வருவேன்” திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க படத்தை இயக்கும் செல்வராகவனே வில்லனாக மிரட்டுகின்றார்.
இந்நிலையில் தனுஷ் ஒரு நாற்காலியில் அமர்ந்து புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் பார்க்க நன்றாகத்தான் இருக்கின்றது இருப்பினும் அவர் கையில் இருக்கும் சிகரெட் மட்டும் வேண்டாம் என ரசிகர்கள் கூறுகின்றனர். காரணம் சிகரெட்டின் காரணமாக பல பிரச்சனைகள் வந்திருக்கின்றது. இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உங்களுக்கு ஏற்கனவே நிறைய பிரச்சினைகள் இருக்கின்ற நிலையில் இப்படி ஒரு போஸ்டர் தேவையா என ரசிகர்கள் புலம்புகின்றனர்.