தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் மோகன் ஜி. இவர் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். தற்போது செல்வராகவனுடம் இணைந்து பகாசூரன் திரைப்படத்தை எடுத்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து படத்தின் வெளியிட்டு வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அடுத்த நாள் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் குற்றாலத்தில் பல மலைகள் காணாமல் போவதாக பிரபல திரைப்பட இயக்குனர் மோகன் ஜி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், சுற்றுவட்டார பகுதி மக்கள் யாரும் இதனை கவனிப்பது இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மழை எப்படி காணாமல் போகும், அதை யார் தூக்கி செல்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை இயக்குனர் வெளியிடவில்லை. அவர் வெளியிட்டுள்ள இந்த தகவல் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.