உத்திரபிரதேசம் தில்லி-சஹாரன்பூர் நெடுஞ்சாலையில் உள்ள பாக்பத்தில் உள்ள ஒரு வங்கிக்கு அருகே கார் மோதிய இரண்டு வயது குழந்தை வெள்ளிக்கிழமை இறந்தது.அவரது இடைவிடாத அழுகையால் எரிச்சலடைந்த அவரது மாற்றாந்தாய் சீதா அவரைத் தள்ளிவிட்டதாகக் கூறுகிறது.
இரண்டு வயது குழந்தை காரில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தக் கூடியது என்றால் அதைவிட கொடுமையான ஒரு நிகழ்வே உத்திர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.உயிரிழந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு செல்ல வந்த தந்தை மற்றும் சகோதரனிடம் அமரர் ஊர்திக்காக ஆயிரம் ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. வறுமையில் இருந்து அவர்களால் பணத்தை கொடுக்க முடியவில்லை. இதனால் குழந்தையின் உடலை பத்து வயது சகோதரன் சுமந்து சென்று அவலம் நிகழ்ந்துள்ளது.