உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தும்மல் வந்த பிறகு சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கித் வாய் நகர் காலி பகுதியை சேர்ந்த ஜுபைர் என்ற 18 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் இரவு வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு செல்லும் வழியில் திடீரென அவருக்கு தும்மல் வந்துள்ளது. நடந்தபடியே தும்பிய அந்த இளைஞர் சில வினாடிகளில் திடீரென சரிந்து விழுந்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை எழுப்பிய நண்பர்கள் பதறிப் போய் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். தும்மலை தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/ShubhamShuklaMP/status/1599346864016740352