Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அய்யோ!… உற்பத்தி அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி…. வருத்தத்தில் விவசாயிகள்…. !!!

திண்டுக்கல் மாவட்டம்  சாணார்பட்டி வட்டாரத்தில் செங்குறிச்சி, கம்பிளியம்பட்டி, அஞ்சுகுளிபட்டி, விரசின்னம்பட்டி, ராஜாக்காபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தென்னந்தோப்புகள் அதிகமாக உள்ளது. கடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தேங்காய் உற்பத்தி வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. அதனை தொடர்ந்து கமிஷன்கள் மூலம் நேரடியாக தோட்டங்களில் தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்பிறகு தொழிலாளர்களால் மட்டைகள் உரிக்கப்பட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் சணல் சாக்குகளில் பேக்கிங் செய்யப்படுகிறது.

அவை டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு தினமும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் உற்பத்தி அதிகரிப்பால் தேங்காய் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு தேங்காய் ரூ.8 கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் தேங்காய் வெட்டுக் கூலி கமிஷன் போக ரூ.6 மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது. தற்போது ஒரு கோழி முட்டை ரூ.6 விற்பனை செய்யப்படுகிறது. அந்த விலை தான் தேங்காகாய்க்கும் கிடைக்கிறது என்று விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Categories

Tech |