நாட்டில் கடந்த சில நாட்களாக பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதற்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. ஒவ்வொரு நாளும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே 8 வயது சிறுமியின் வாயில் துணியை அடைத்து, பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெறித்துக் கொன்று சாக்கடையில் தூக்கி ஏறிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டைல்ஸ் கம்பெனியில் வேலை செய்துவரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதியரின் மகளான இந்த சிறுமிக்கு , அங்கு வேலை பார்க்கும் வடமாநில இளைஞர்கள் 4 பேர் தான் இப்படியான ஒரு கொடூரத்தை இழைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.