கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. அனைத்து வர்த்தகமும் சிதைந்து இருக்கும் நிலையிலும் தங்கத்தின் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பாமர மக்களின் தங்கம் வாங்கும் கனவு நிறைவேறாத ஒன்றாக மாறி இருக்கின்றது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை மக்கள் மனதில் தித்திக் என்ற பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தான் சென்னையில் தங்கத்தின் விலை ரூ. 40ஆயிரத்தை நெருங்கி மான்களை கலங்கடிக்கின்றது. 22 கிராம் சவரனுக்கு 152 உயர்ந்து 39 ஆயிரத்து 232க்கும், கிராமிற்கு ரூ. 19 உயர்ந்து…. ரூபாய் 4904க்கும், 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ 41 ஆயிரத்து 184க்கும், கிராமிற்கு ரூ. 5148க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து 66.90க்கும், கிலோ 66 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.