திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் காட்டெருமைகள் நகருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நேற்று முன்தினம் வாரச்சந்தை நடைபெற்றதால் பொதுமக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் நடமாடினர். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் கொடைக்கானல் 7 ரோடு சந்திப்பு ஆகிய பகுதிகளில் நண்பகல் 11 மணி அளவில் பத்துக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக வலம் வந்தனர்.
அதனைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் பீதியடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்திவிட்டு காட்டெமைகளுக்கு செல்ல வழி விட்டனர். இதையடுத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நகருக்குள் உலா வந்த அந்த காட்டெருமைகள் அதன் பின் தோட்டத்துக்குள் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.