நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நயன்தாராவை போடா வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தலைவர் 169 படத்தை இயக்க இருக்கிறார். முதலில் சிவகார்த்திகேயன், விஜய் இப்போது சூப்பர் ஸ்டார் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வளர்ந்து வருகிறார். தற்போது தலைவர் 169 குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் இயக்குனர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு நயன்தாராவை ஹீரோயினாக போடுமாறு ரஜினி கூறியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த் தனக்கு வயதாகி விட்டதால் இளம் ஹீரோயின்களை போட்டால் நன்றாக இருக்காது என்று நயன்தாரா ஹீரோயினாக போடுமாறு கேட்டுள்ளார். மேலும் நயன்தாரா தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு சீனிர்களுக்கும் ஜோடியாக நடித்து வருகிறார். ஆனால் ரசிகர்கள் நயன்தாராவே எல்லா படங்களிலும் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதால் அவரை தலைவர் 169 படத்திற்கு வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.