கூடங்குளம் அணுமின் நிலையம் வளாகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
தமிழ்நாட்டில் இது புதிது கிடையாது, சும்மா எதிர்க்கிறார்கள். அதாவது ஜிஎஸ்டி என்றால் என்னவென்று தெரியாமல் ஒரு எம்பி ஐந்து வருடம் ஜிஎஸ்டியை எதிர்த்து கொண்டிருக்கிறார். அது ஏன் எதிர்க்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.இப்போ அவர் பேசிய பிறகுதான் நமக்கு தெரியுது… இந்த எம்.பிக்கு ஜிஎஸ்டி பற்றியே தெரியவில்லை என்று. அதே போல அரசைப் பொருத்தவரை நியாயமான முறையில் எந்த குரல் கொடுத்தாலும் கூட செவிசாய்த்து, சரி செய்வதற்கு மத்திய அரசு எப்போதும் கூட இருக்கிறது.
எதிர்க்க வேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காக எதிர்ப்பவர்களை ஜனநாயகத்தில் என்ன சொல்ல முடியும். அவர்களுக்கும் உரிமை இருக்கிறது, எதிர்கட்டும் என்றுதான் நாம் சொல்ல முடியும். வேற என்ன சொல்ல முடியும். எந்த ஒரு பாயிண்ட் இல்லாம இத்தனை காலமாக நன்றாக சென்று இருக்கக்கூடிய அணுக்கழிவு மையம். இன்டர்நேஷனல் லெவல் எல்லா பாதுகாப்பையும் பராமரித்து கொண்டிருக்கும் ரியாக்டர், எந்த பிரச்சினையும் இல்லாத பொழுது எதற்காக பிரச்சினையை கிளப்பி விடுகிறார்கள் என்றால் அரசியல் காரணத்திற்காக மட்டும் தான்.வேறு எப்படி சொல்வது.
இப்போது சினிமா தியேட்டர் திறக்கிறார்கள், சினிமா தியேட்டரில் எல்லா படத்தையும் அனுமதிக்கிறார்கள் ஏன் ? ஒரு பக்கம் உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் படத்தை பிரமொட் செய்கிறார். இந்த படத்தை பாருங்கள், அந்த படத்தை பாருங்கள், இந்த படம் ரிலீஸ் ஆகுது என.. நீங்கள் கோவிலுக்கு போவதால் கொரோனா வரும் என்றால் சினிமாக்கு போன கொரோனா வரதா ? பள்ளிக்கு போன கொரோனா வரதா ? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.